Followers

Jul 9, 2013

A Real Short Film,எக்ஸ்பிரஸ் அவென்யு

 
 
 
எக்ஸ்பிரஸ் அவென்யுவில் ஜூலை முதல் தேதி(01/07/2013)  நடந்த தற்கொலை சம்பவத்தை மிக அழகாக தொகுத்து, உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த யு டுயு ப் வீடியோ.

 
 
நான்கு மணிநேர சம்பவத்தை அரை மணி நேரத்தில் மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
 
"இந்தியன் எக்ஸ்பிரஸ்" குழுமத்தின் அங்கமாக எக்ஸ்பிரஸ் அவென்யு  இருப்பதாலோ என்னவோ இதை எந்த ஊடகங்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இதில் சத்யம் டிவியின் செய்தி முழு பூசனிக்காயைய் சோற்றில் புதைப்பதாக உள்ளது. சத்யம் டிவி செய்தி பார்க்க  https://www.youtube.com/watch?v=eEXDo_Y4NkU
 
பக்க சார்பில்லாத தொலை தொடர்பு செய்தி நிறுவனங்களே இல்லை என்றாகிவிட்டது.
முன்பு கவர் வாங்கிகொண்டு புதுமுக நடிகர்களை ஆஹா ஓஹோ புகழ்ந்து எழுதுவதும் கவர் இல்லை என்றால் மட்டம் தட்டி எழுதுவதும் வாடிக்கையாய்  இருந்தது. தற்போது அது சமுக வலைதளங்களுக்கும் விரிவடைந்து இன்னும் சுருங்க சொன்னால்  தனிநபர் வலைதளங்களுக்கும் நீண்டு விட்டது.
 
 (இங்கு நடிகர்கள் என்பதை நீக்கிவிட்டு இயக்குனர்,அரசியல்வாதி,தொழிலதிபர்,திரைப்படம்,சாதி,மதம்,...இத்யாதி இத்யாதி  என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துகொள்ளலாம்)

"பிரபல" பதிவர்களுக்கு யாரவது கவர் கொடுத்தால் தான்  எழுதுவார்கள்.
 
 

May 24, 2013

தோல்வி!




தோல்வி நெருடலாயிருக்கும்.
 
தோல்வி கவலைத்தரும்.
 
தோல்வி வலிக்கவும் செய்யும்.
 
தோல்வி விரக்த்தியை கொடுக்கும்
.
தோல்வி மனதை வாட்டியெடுக்கும்.
 
தோல்வி சோர்வை விதைக்கும்.
 
தோல்வி நிம்மதியை பறிக்கும். இருந்தும் .
 
தோல்வி படிப்பினை கொடுக்கும்.
 
தோல்வி மனிதனை பக்குவப்படுத்தும் !

May 17, 2013

அழகு!

   

அத்தை மகலேன்று
அனுதாபம் கொள்ளவில்லை
உன்னை
அழகில்லாதவள் என்ற
தாழ்வுணர்சசி வாட்டுகிறதென்று
அறவணைக்க துடிக்கவில்லை .

இது
உன்னைப்பற்றி
என்
உள்ள உணர்வுகள் பற்றியும்
சில வரிகள் !

மிதமான மழைத்தூறலில் வந்து
வர்ணஜாலம் காட்டும்
வானவில்லைப்போல்
அழகும் ,
சற்று நேரத்தில் கலைத்து போகும் !

நரையும்
நடை தளர்வும்,
கன்னத்தின் சுருக்கமும்,
வரும்
கரு வளையத்தையும்
யாரால் தடுத்திட முடியும் !?

முதுமையில் பறிபோகும்
அழகை மட்டும் நேசிப்பவனுக்கு
சந்தோஷம்
மனைவியால் நிரந்தரமில்லை.

ஒரு பெண்ணின்
பரிசுத்தமான பாசமும்
பரிவும் அக்கறையுமே வாழ்க்கையை
அழகுபட ......
அலங்கரித்து செல்லும் !

புரிந்துக்கொள்
புற அழகை
புறம் தள்ளும்
நேர்மையான நேசத்திற்கு
இன்னொரு பெயர் காதல் !

என்
மின் மடலைக்கண்ட போது
என்னவளுக்கு
கொஞ்சமாவது தகர்ந்திருக்கும்
அழகில்லாதவள் என்ற
தாழ்வுணர்ச்சி !

Oct 17, 2012

ஓ....ப்பா கங்ணம் ஸ்டைல்...

கங்காரு குதித்து ஓடுவது  மாதரியான இந்த நடனம் குழந்தைகள் மத்தியில்  மிக பிரபலம். இந்த பாடலை பாருங்க ....

கண்டிப்பா  நீங்களும் ஒருமுறையாவது  ஆடி  பார்பிங்க 


 

Oct 24, 2011

நம்பிக்கை

       

உயிர் கொடுத்து விரல் பற்றி 
நடை பழக்கி நீதியை போதித்த 
தந்தையின் மரணத்தின் 
துயரத்தில் நானும் 
துவண்டுப் போயிருக்கலாம் !

உதிரத்தில் உருவம் கொடுத்து 
வளர்ச்சிக்கு பாலுட்டி 
தாலாட்டில் தமிழ் புகட்டி ...
வாழ்ந்திட வழி காட்டிய ...
அன்னையின் இறுதியுடன் 
நானும் இறுகி போயிருக்கலாம் !

மகிழ்ச்சி ,வீதியிலும் விளையாட்டிலும் 
உண்டென்று 
அழைத்து வந்த நண்பன் 
கவன பிழையில் 
விபத்தில் சிதறியதும் 
நானும் நொருங்கி போயிருக்கலாம் !

சுருட்டி சென்ற சுனாமி 
சிதைத்துப் போட்ட சூறைக்காற்று 
பூமியை புரட்டி போட்ட பூகம்பம் 
நாளைய உணவை 
கேள்வியாக்கிய வெள்ளத்துடன் 
என் துடிதுடிக்கும் இதயமும் 
நின்று போயிருக்கலாம் !

உறவின் பிரிவிலும்
துன்பத் துயரிலும் 
மரணங்கள் உறுதியென 
உணர்ந்த பின்பும் 
நாளைய பொழுதிலாவது 
நன்மைகள் கிட்டாதா...!?
என்ற எதிர்பார்ப்புடன் 
இன்றிரவு தூங்கப்போகின்றேனே 
இதைதான்
நம்பிக்கை என்பதோ ? 
                                            
 16-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசுவில் இடம்பெற்ற எனது ஆக்கம்

Oct 15, 2011

குட்டி இந்தியா (சிங்கப்பூர் தே...க்கா)


தேசம் விட்டு
தேசம் வந்து பொருள்தேடும் எனது
தேச நண்பர்களின் சொர்க்கபூமி!

தேகமும் மனமும்
ரணமாகிபோனதை
நண்பர்களின் நேச தழுவலில்
மறந்திட செய்யும்
மகத்தான இடம்!

தமிழக கிராமங்கள்
தொலைத்த தாவணி...
எங்கும் அரிதாகிப்போன
மூங்கில் குழாய் புட்டு...
விடுதியில் கண்ட
கோபால் பல் பொடி...
வீக்கத்தை தணிக்கும்
தென்னமரகுடி எண்ணையும்
தாராளமாய் கிடைக்கும்
தமிழக சந்தை!

மகிழ்ச்சி துக்கம்
விரோதம் விசாரிப்பு
கொடுக்கல் வாங்கல்
குதூகலம் குடும்பசண்டை
ஊழியர்கள் மத்தியில்
ஞாயிறு தோறும்
கதம்பமாய் கொட்டிக்கிடக்கும்
அதிசய நந்தவனம்!

Sep 22, 2011

நிலையன நினைத்தே!


                                   படதுக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லைங்க



                           ருவில் 
                            உயிர் பெற்றதும் 
                            உறுதியாகிவிட்டது 
                            மரணமும் !


                            முதிர்ந்தோ ...
                            முதிராமலோ ,
                            முடிந்து போய்விடும் 
                             வாழ்க்கை !


                             நாம் 
                             விரும்பினாலும் 
                             விரும்பாவிடிலும் 
                             விட்டு வைக்கப்போவதில்லை 
                             முதுமை !


                             உயிரும் நட்பும் 
                             எப்படி பிரியும் 
                             எப்போது பிரியும் 
                             எழுதி வைத்திட முடியவில்லை 
                             எவருக்கும் !


                             பிறப்பும் இறப்பும் 
                             எவரும்மரியாமலே ...
                             எவ்வித பிழையும் மின்றி 
                             சரியாகவே வகுத்திருக்கிறது 
                             இயற்கை !


      
                           ஆனாலும் நாம் ....


                            நிலையற்றதை 
                            நிலையன நினைத்தே 
                            நித்தமும் 
                            தொலைத்து விட்டோம் 
                            அமைதியை !
                                                                                            
                                                       
             
                      24/07/2011  சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்